Atharam Ninthirup Patharam
ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா? (ஆதாரம்) ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் – போற்றும் போதனே சுவாமி நாதனே, என்றும் (ஆதாரம்) பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே (ஆதாரம்) முருகா.. ஆ.. ஆ…அ….