Tag «navarathri golu songs in tamil download»

Navarathri Songs – கருணை தெய்வமே கற்பகமே

கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை) உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை) ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும் அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

Navarathri Songs – மாணிக்க வீணையேந்தும்

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா பாடவந்தோமம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ – இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க) நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க) வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் – எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே – என்றும் அள்ளி அருளைத் தரும் அன்னையும் …

Navarathri Songs – ஸ்ரீசக்ர ராஜ

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோஹரி ஞான வித்யேஷ்வரி ராஜராஜே*ஸ்வரி (ஸ்ரீசக்ர) பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும் பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும் உலகம் முழுதும் என் அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் நிழலெனத் தொடர்ந்த முன்னாள் …

Navarathri Songs – ஜகத் ஜனனி சுகபாணி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்) சுக ஸ்வரூபிணி மதுர வாணி சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்) பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ பஞ்சமி பரமேஷ்வரி வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ வேத வேதாந்த நாத ஸ்வரூபிணி (ஜகத்)

Navarathri Songs – தேவி நீயே துணை

தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி) தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி) மலையத்வஜன் மாதவமே – காஞ்சன மாலை புதல்வி மஹாராக்னி அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

Navarathri Songs – அம்பா மனம் கனிந்துனது

அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார் திருவடி இணை துணையென் (அம்பா) வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்) பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும் சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும் பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும் இந்த வரம் தருவாய் ஜகதீ*ஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)

Navaratri Songs – நீ இரங்காயெனில்

நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த திருமளியே – பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்

Navaratri Songs – நானொரு விளையாட்டு

நானொரு விளையாட்டு பொம்மையா நானொரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவியெடுத்து திண்டாடியது போதாதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு) அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு)

Navaratri Songs – உன்னையல்லால் வேறே

உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்) என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா இனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்) நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன் எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்)