Tag «navaratri songs»

Navaratri Songs – கலைவாணி நின் கருணை

கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

Navarathri Songs – செல்வத் திருமகளே! மோகனவல்லியே!

செல்வத் திருமகளே! மோகனவல்லியே! எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே! சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே! பல வரம் வழங்கிடும் ரமாமணியே! வரதராஜ சிகாமணியே! தாயே! தனலட்சுமியே! சகல வளமும் தந்திடுவாய்

Navarathri Songs – காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி …