Tag «Sastha Dasakam Lyrics in English»

மகாசாஸ்தா அஷ்டகம் | Maha Sastha Ashtakam

மகாசாஸ்தா அஷ்டகம் அருள், பொருள், ஆரோக்யம் பெற – கார்த்திகை மாதம் காலை/ மாலை. நீலவர்ணமான குதிரையின் மேல் அமர்ந்து பவனி வருபவரும், அடியார்களின் குறைகளைத் தீர்ப்பதிலேயே கருத்துள்ளவரும் சாதுக்களுக்கு எப்போதும் நன்மை செய்கின்றவரும், மகானும், ஈஸ்வரினின் மகனுமான ஐயப்பனை நான் சரணடைகின்றேன். ஹரிஹர சுதனும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் ஆகியவர்களால் வணங்கப்படுபவரும், சிறந்த கம்பீரமான வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனை வணங்குகின்றேன் அநீதி நிறைந்த காட்டில் எப்பொழுதும் வேட்டையாடுகின்றவரும், அசுர …

மகா சாஸ்தா துதி | Maha Sastha Stuti

மகா சாஸ்தா துதி பகை, பயம் நீங்க, பிணிகள், கவலைவிலக, செல்வங்கள் கைகூடும் நீல வண்ணக் குதிரையை வாகனமாகக் கொண்டு பயணிப்பவரும், தன்னை அடைக்கலமடையும் அடியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவரும், சாதுக்களுக்கு எப்போழுதும் நன்மை செய்கின்றவரும், மகாஞானம் உள்ளவரும் ஈஸ்வரனுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்! சிவவிஷ்னு மைந்தனும், பரிபூரணமானவரும், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் போன்றோர்களால் வணங்கப்படுபவரும், சிறந்ததும், வெண்மையானதும் மதங் கொண்டதுமான யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்! கொடிய வணவிலங்குகளை, எப்பொழுதும் வேட்டை …