சிவன் பாமாலை | Sivan Pamalai
திருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்) இயற்றியவர் சிவஞான வள்ளலார் நூல் 17.ஆரண உருவமாகி அம்பரக் கோயில் தோறும்நாரணன் பிரமன் காணா நட்டம் நீ செய்தது என்னே?காரணம் உயிரே என்னக் கண்டவர் காணாது ஏங்கச்சீரணி மாடம் ஓங்கும் திருப்புலிவனத்துளானே! 41 அறிவிக்கக் குரவரில்லை அன்னையும் பிதாவும் இல்லைஅறிவிக்க அயல் ஒன்றில்லை அம்பலத்தாடி என்றும்அறிவிக்கும் அப்பனே என்று அயன் அரி முனிவரெல்லாம்செறிவுடை அடிமை செய்வார் திருப்புலிவனத்துளானே! முற்றும் . திருச்சிற்றம்பலம் .