ஸ்ரீகும்பேஸ்வரர் துதி | Sri Kumbeshwara Swamy Stotram
ஸ்ரீகும்பேஸ்வரர் துதி கிரக தோஷங்கள் நீங்கி வேண்டிய வளம்பெற மாசி மகத்தன்று சொல்ல வேண்டிய ஸ்ரீகும்பேஸ்வரர் துதி எல்லா லக்னங்களுக்கும் அதிபதிகளான நவகிரகங்களுக்குத் தலைவராக இருப்பவரே, கும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன். நவகிரகங்களால் பூஜிக்கப்படுபவரே,எண்ணிய தெல்லாம்தரும் காமதேனு மற்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரே, கும்பேஸ்வரனே உனக்கு எனது வணக்கங்கள். ஐந்து முகங்களையுடைவரே,பிரளய காலத்தில் மிதந்து வந்தஅமிர்த கலயத்தை உடைத்துஎல்லோருக்கும் எல்லா வளமும் வழங்கியகும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன்.எனக்கு அருள் புரிவாய்!