Tag «thayumanavar songs for normal delivery»

Thayumanavar Songs Lyrics List in Tamil

Thayumanavar Songs Lyrics List in Tamil Thayumanavar Songs – திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் Thayumanavar Songs – பரிபூரணானந்தம் Thayumanavar Songs – பொருள் வணக்கம் Thayumanvar Songs – சின்மயானந்தகுரு Thayumanavar Songs – மௌனகுரு வணக்கம் Thayumanavar Songs – கருணாகரக்கடவுள் Thayumanavar Songs – சித்தர்கணம் Thayumanavar Songs – ஆனந்தமானரம் Thayumanavar Songs – சுகவாரி Thayumanavar Songs – எங்கு நிறைகின்ற பொருள் Thayumanavar Songs …

Thayumanavar Songs – சிவன்செயல்

22. சிவன்செயல் சிவன்செய லாலே யாதும் வருமெனத் தெறேன் நாளும் அவந்தரு நினைவை யெல்லாம் அகற்றிலேன் ஆசை வெள்ளங் கவர்ந்துகொண் டிழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட் டையோ பவந்தனை ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே. 1. பாவியேன் இனியென் செய்கேன் பரமனே பணிந்துன் பாதஞ் சேவியேன் விழிநீர் மல்கச் சிவசிவ என்று தேம்பி ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ சாவிபோஞ் சமயத் தாழ்ந்து சகத்திடைத் தவிக்கின் றேனே. 2. இடைந்திடைந் தேங்கி மெய்புள …

Thayumanavar Songs – வம்பனேன்

21. வம்பனேன் வம்பனேன் கள்ளங் கண்டு மன்னருள் வெள்ள ராய உம்பர்பால் ஏவல் செய்யென் றுணர்த்தினை ஓகோ வானோர் தம்பிரா னேநீ செய்த தயவுக்குங் கைம்மா றுண்டோ எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனியொன்றுங் குறைவிலேனே. 1. குறைவிலா நிறைவாய் ஞானக் கோதிலா னந்த வெள்ளத் துறையிலே படிந்து மூழ்கித் துளைந்துநான் தோன்றா வாறுள் உறையிலே யுணர்த்தி மோன வொண்சுடர் வைவாள் தந்த இறைவனே யுனைப்பி ரிந்திங் கிருக்கிலேன் இருக்கி லேனே. 2. இருநில மாதி நாதம் ஈறதாம் …

Thayumanavar Songs – சொல்லற்குஅரிய

20. சொல்லற்குஅரிய சொல்லற் கரிய பரம்பொருளே சுகவா ரிதியே சுடர்க்கொழுந்தே வெல்லற் கரிய மயலிலெனை விட்டெங் கொளித்தாய் ஆகெட்டேன் கல்லிற் பசிய நாருரித்துக் கடுகிற் பெரிய கடலடைக்கும் அல்லிற் கரிய அந்தகனார்க் காளாக் கினையோ அறியேனே. 1. அறிவிற் கறிவு தாரகமென் றறிந்தே, அறிவோ டறியாமை நெறியிற் புகுதா தோர்படித்தாய் நின்ற நிலையுந் தெரியாது குறியற் றகண்டா தீதமயக் கோதி லமுதே நினைக்குறுகிப் பிரிவற் றிறுக்க வேண்டாவோ பேயேற் கினிநீ பேசாயே. 2. பேசா அநுபூ தியை …

Thayumanavar Songs – ஆரணம்

ஆரணம் ஆரண மார்க்கத் தாகம வாசி அற்புத மாய்நடந் தருளுங் காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங் கண்கள்மூன் றுடையஎன் கண்ணே பூரண அறிவிற் கண்டிலம் அதனாற் போற்றிஇப் புந்தியோ டிருந்து தாரணி யுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத் தகுமே. 1. இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட் டெவ்வுல கத்தையு மீன்றுந் தடமுறும் அகில மடங்குநா ளம்மை தன்னையு மொழித்துவிண் ணெனவே படருறு சோதிக் கருணையங் கடலே பாயிருட் படுகரிற் கிடக்கக் கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக் …

Thayumanavar Songs – பொன்னை மாதரை

18. பொன்னை மாதரை பொன்னை மாதரைப் பூமியை நாடிடேன் என்னை நாடிய என்னுயிர் நாதனே உன்னை நாடுவன் உன்னருள் தூவெளி தன்னை நாடுவன் தன்னந் தனியனே. 1. தன்ன தென்றுரை சாற்று வனவெலாம் நின்ன தென்றனை நின்னிடத் தேதந்தேன் இன்னம் என்னை யிடருறக் கூட்டினால் பின்னை யுய்கிலன் பேதையன் ஆவியே. 2. ஆவி யேயுனை யானறி வாய்நின்று சேவி யேன்களச் சிந்தை திறைகொடேன் பாவி யேனுளப் பான்மையைக் கண்டுநீ கூவி யாளெனை யாட்கொண்ட கோலமே. 3. கோல …

Thayumanavar Songs – நினைவு ஒன்று

17. நினைவு ஒன்று நினைவொன்று நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்குமிட மேயருளாம் நிட்டையரு ளட்டுந் தனையென்று மறந்திருப்ப அருள்வடிவா னதுமேல் தட்டியெழுந் திருக்குமின்பந் தன்மயமே யதுவாம் பினையொன்று மிலையந்த இன்பமெனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார்மற் றுந்தான் மனையென்றும் மகனென்றுஞ் சுற்றமென்றும் அசுத்த வாதனையாம் ஆசைமொழி மன்னொருசொற் கொண்டே. 1. ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த ஒருமொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங் கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய் கருமொழியிங் …

Thayumanavar Songs – பன்மாலை

16. பன்மாலை பன்மாலைத் திரளிருக்கத் தமையு ணர்ந்தோர் பாமாலைக் கேநீதான் பட்ச மென்று நன்மாலை யாவெடுத்துச் சொன்னார் நல்லோர் நலமறிந்து கல்லாத நானுஞ் சொன்னேன் சொன்மாலை மாலையாக் கண்ணீர் சோரத் தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் என்மாலை யறிந்திங்கே வாவா என்றே எனைக்கலப்பாய் திருக்கருணை எம்பி ரானே. 1. கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன் கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும் ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும் …

Thayumanavar Songs – தேன்முகம்

15. தேன்முகம் தேன்முகம் பிலிற்றும் பைந்தாட் செய்யபங் கயத்தின் மேவும் நான்முகத் தேவே நின்னால் நாட்டிய அகில மாயை கான்முயற் கொம்பே என்கோ கானலம் புனலே என்கோ வான்முக முளரி என்கோ மற்றென்கோ விளம்பல் வேண்டும். 1. வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தைக் காண்டக அழித்தான் முக்கட் கடவுள்தான் இனைய வாற்றால் ஆண்டவ னெவனோ என்ன அறிகிலா தகில நீயே ஈண்டிய அல்லல் தீர எம்மனோர்க் கியம்பு கண்டாய். 2. கண்டன அல்ல என்றே …