Thiruppavai Song 24 Tamil with Meaning
திருப்பாவை பாடல் 24 அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய். பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் …