Tag «valvu anaval durga song lyrics in english»

Navarathri Songs – கற்பக வல்லி

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! (கற்பக வல்லி) பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பக வல்லி) நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால் நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! (கற்பக வல்லி) எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும் நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய கல்யாணியே …

Navaratri Songs – கலைவாணி நின் கருணை

கலைவாணி நின் கருணை தேன்மழையே விளையாடும் என் நாவில் செந்தமிழே அலங்கார தேவதையே வனிதாமணி இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி! மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும் அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும் ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம் சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்! வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம் வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம் வானகம் வையகம் உன் புகழ் பாடும்.

Navarathri Songs – செல்வத் திருமகளே! மோகனவல்லியே!

செல்வத் திருமகளே! மோகனவல்லியே! எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே! எண் கரங்களில் சங்கு சக்கரம் வில்லும் அம்பும் தாமரை மின்னும் கரங்களில் நிறைகுடம் தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே! வரத முத்திரை காட்டியே பொருள் வழங்கும் அன்னையே! சிரத்தினில் மணி மகுடம் தாங்கிடும் சிந்தாமணியே! பல வரம் வழங்கிடும் ரமாமணியே! வரதராஜ சிகாமணியே! தாயே! தனலட்சுமியே! சகல வளமும் தந்திடுவாய்

Navarathri Songs – காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி கருணாம்பிகையே! தருணம் இதுவே தயை புரிவாயம்மா! பொன் பொருள் எல்லாம் வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா! ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய் என் அன்னை நீயே அம்மா! மங்களம் வழங்கிடும் மகாசக்தியே! மங்கலத் தாயே நீ வருவாயே! என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே! எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே! பயிர்களில் உள்ள பசுமையில் கண்டேன் பரமேஸ்வரி உனையே! சரண் உனை அடைந்தேன் சங்கரி தாயே, சக்தி தேவி …

Navarathri Songs – Mangala Roobini-மங்கள ரூபிணி

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …

Rahu Kala Durga Stotram in Tamil

ராகு கால துர்கா அஷ்டகம் வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே உலகை ஈன்றவள் துர்க்கா உமையுமானவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய …

Raku Kala Durga Ashtakam in English

Vazhvu Aanaval Durga, Vakkumanaval, Vanil Ninraval, Indha Mannil Vandhanal, Thazhvu Athaval, Durga Thayum Aanaval Thapam Neengiye, Yennai Thangum Durgaye, Devi Durgaye, Jaya Devi Durgaye, Devi Durgaye, Jaya Devi Durgaye Ulagai Eendraval Durga, Umayum Aanaval, Unmai Aanaval, Yendhan Uyirai Kappaval, Nilavil Ninraval, Durga Nithyai Aanaval, Nilavi Nindraval, Yendhan Nidhiyum Durgaye, Devi Durgaye, Jaya Devi Durgaye, Devi …