Thayumanavar Songs – ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம்
ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் ஆகார புவனமின் பாகார மாக அங்ஙனே யொருமொழியால் அகண்டா கார யோகானு பூதிபெற்ற அன்ப ராவிக் குறுதுணையே என்னளவும் உகந்த நட்பே வாகாரும் படிக்கிசைகிண் கிணிவா யென்ன மலர்ந்தமல ரிடைவாசம் வயங்கு மாபோல் தேகாதி யுலகமெங்கும் கலந்து தானே திகழனந்தா னந்தமயத் தெய்வக் குன்றே. 1. அனந்தபத உயிர்கள்தொரும் உயிரா யென்றும் ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத் தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச் சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே இனம்பிரிந்த மான்போல்நான் …