Thayumanavar Songs – எந்நாள்கண்ணி: ஆனந்த இயல்பு
ஆனந்த இயல்பு பேச்சுமூச் சில்லாத பேரின்ப வெள்ளமுற்றுநீச்சுநிலை காணாமல் நிற்குநாள் எந்நாளோ. 1. சித்தந் தெளிந்தோர் தெளிவில் தெளிவானசுத்த சுகக்கடலுள் தோயுநாள் எந்நாளோ. 2. சிற்றின்பம் உண்டூழ் சிதையஅனந் தங்கடல்போல்முற்றின்ப வெள்ளம்எமை மூடுநாள் எந்நாளோ. 3. எல்லையில்பே ரின்பமயம் எப்படிஎன் றோர்தமக்குச்சொல்லறியா ஊமர்கள்போற் சொல்லுநாள் எந்நாளோ. 4. அண்டரண்ட கோடி அனைத்தும் உகாந்தவெள்ளங்கொண்டதெனப் பேரின்பங் கூடுநாள் எந்நாளோ. 5. ஆதியந்த மில்லாத ஆதிஅ நாதிஎனுஞ்சோதிஇன்பத் தூடே துளையுநாள் எந்நாளோ. 6. சாலோக மாதி சவுக்கியமும் விட்டநம்பால்மேலான ஞானஇன்பம் …