Thayumanavar Songs – அகிலாண்ட நாயகி
அகிலாண்ட நாயகி வட்ட மிட்டொளிர்பி ராண வாயுவெனுநிகள மோடுகம னஞ்செயும்மனமெ னும்பெரிய மத்த யானையைஎன்வசம டக்கிடின் மும் மண்டலத் திட்ட முற்றவள ராச யோகமிவன்யோக மென்றறிஞர் புகழவேஏழை யேனுலகில் நீடு வாழ்வன்இனிஇங்கி தற்கும்அனு மானமோ பட்ட வர்த்தனர் பராவு சக்ரதரபாக்ய மானசுப யோகமும்பார காவிய கவித்வ நான்மறைபராய ணஞ்செய்மதி யூகமும் அட்ட சித்தியுந லன்ப ருக்கருளவிருது கட்டியபொன் அன்னமேஅண்ட கோடிபுகழ் காவை வாழும்அகிலாண்ட நாயகியென் அம்மையே. 1.