Thayumanavar Songs – ஆரணம்
ஆரணம் ஆரண மார்க்கத் தாகம வாசி அற்புத மாய்நடந் தருளுங் காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங் கண்கள்மூன் றுடையஎன் கண்ணே பூரண அறிவிற் கண்டிலம் அதனாற் போற்றிஇப் புந்தியோ டிருந்து தாரணி யுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத் தகுமே. 1. இடமொரு மடவாள் உலகன்னைக் கீந்திட் டெவ்வுல கத்தையு மீன்றுந் தடமுறும் அகில மடங்குநா ளம்மை தன்னையு மொழித்துவிண் ணெனவே படருறு சோதிக் கருணையங் கடலே பாயிருட் படுகரிற் கிடக்கக் கடவனோ நினைப்பும் மறப்பெனுந் திரையைக் …