Category «Vratham & Poojas»

Importance of Thaipusam

தைப்பூசத்தின் சிறப்புகளும், விரத முறைகளும் !! தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு …

Thai Poosam – தைப்பூசம்

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு வரும் ஜனவரி 31-ந்தேதி (புதன் கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் …

Monthly Shasti Viratham – மாத சஷ்டி விரதம்

சஷ்டி திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, …

Tuesday Vratham for Lord Murugan – செவ்வாய் கிழமை விரதம்

செவ்வாய் கிழமை விரதம்: ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய்க் கிழமை முருகன் விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு …

Monthly Karthigai Viratham – கிருத்திகை விரதம்

கார்த்திகை நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் …

Sevvai Kizhamai Vrahtam, Karthigai Vratham & Skanda Sashti Vratham

முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. வார விரதம்: வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் இருப்பது; நட்சத்திர விரதம்: நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பது; திதி விரதம்: திதி விரதம் என்பது சஷ்டி திதியில் இருப்பது. வார செவ்வாய் கிழமை விரதம்: ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் …

Pepper Lamp for Bhairava in Tamil – மிளகு தீபம்

கால பைரவரை அஷ்டமி திதியில் ராகு நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பாகும். கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீரடையும். மிளகு தீபம் ஏற்றுவது எப்படி? ஒரு வெள்ளை நிற புதியத் துணியில், 27 மிளகுகளை எடுத்து, துணியை முடிந்து திரி போல முடிந்து கொள்ள வேண்டும். பிறகு மிளகைத் துணியோடு நல்லெண்ணையில் ஒரு இரவு முழுவதும் நனைத்து வைக்க வேண்டும். …

Pepper Lamp for Bhairava

Worshiping Lord Bhairava on Ashtami Thithi & Rahu Kalam with pepper lamp is considered to be more auspicious and brings prosperity in business, work and also helps to get rid off of Black magic and health issues. Its considered to be more auspicious to worship Lord Bhairava by lighting the following Lamps. Pepper Lamp for …

Ayyappa Vratham Rules & Procedures in Tamil

ஐய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் முறைகள்! கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் …