இந்திரனின் ஐராவதம் கதை | Story of Airavatham
ஒரு முறை இறைவனை பூஜித்த மலர்களை எடுத்துக் கொண்டு துர்வாச மகரிஷி இந்திரனைக் காணச் சென்றார்… அந்நேரம் அசுரர்களுடன் போரிடுவதற்காக இந்திரன் ஐராவதம் என்ற தன் வெள்ளை யானையின் மீது அமர்ந்து சென்று கொண்டு இருந்தான்…
முனிவர் கொடுத்த மலர்களை தன் யானையின் தந்தத்தின் மீது பக்தியோடு வைத்தான் இந்திரன்… ஆனால் யானையோ அதைக் கீழே தள்ளி காலால் மிதித்தது… இதைக் கண்டு கோபமுற்ற துர்வாசர் அது காட்டு யானையாக மாறித் திரியும்படி சபித்தார்…
யானை தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கோர நூறு வருடங்களுக்கு பிறகு சாப விமோசனம் கிடைக்கும் என்று முனிவர் கூறினார்…
ஒரு முறை யானை தில்லை வனத்தில் ஒரு சிவலிங்கத்தை கண்டது… தன தும்பிக்கையில் நீரேந்தி பக்தியோடு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய சாபம் நீங்கி மீண்டும் இந்திர லோகத்துக்கே திரும்பியது…