பாவம் நீக்கும் பல்லி தரிசனம்

பாவம் நீக்கும் பல்லி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்… இதன் பின்னே இருக்கும் கதையை அறிவோம்… ஸ்ருங்கிபேரரின் புதல்வர்கள் ஹேமன், சுக்லன்… இவர்கள் இருவரும் கௌதம ரிஷியின் சீடர்கள்…

ஒருநாள் பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை மூடாமல் வைத்துவிட்டனர்… அபிஷேக நேரத்தின் போது அதை முனிவரிடம் கொடுக்க அதனுள்ளே இருந்து ஒரு பல்லி குதித்து ஓடியது… இந்த அலட்சிய செயலால் கோபமடைந்த முனிவர் தன் சீடர்கள் இருவரும் பல்லிகளாக மாறும்படி சபித்துவிட்டார்…

சாபவிமோசனம் வேண்டி நின்றபோது காஞ்சி வரதராஜரை தரிசனம் செய்து தவம் இருந்தால் பாவம் தீரும் என்று வழி சொல்ல இருவரும் அதேபோல் காஞ்சியில் இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தனர்…

இந்த புராணக் கதையின் அடிப்படையிலேயே காஞ்சியில் பல்லிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன…