Mahabharatham story in Tamil 76 – மகாபாரதம் கதை பகுதி 76
மகாபாரதம் – பகுதி 76 படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ஆத்திரத்துடன் பீமன் அருகில் வந்தான். அவனுக்கு துணையாக பல நாட்டு ராஜாக்களும் வந்தனர். பீமன் அவர்களது தேர்களை தன் புஜபலத்தாலேயே அடித்து நொறுக்கினான். அந்த ராஜாக்களை தன் கதாயுதத்தால் கொன்று போட்டான். பின்னர் துரியோதனனின் தேரை தன் பலம் கொண்ட மட்டில் தூக்கி வீசினான். துரியோதனன் இறந்துவிட்டானோ …