மஹாபாரதம் | பரீக்ஷித் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட கதை

மஹாபாரதம் | பரீக்ஷித் சாம்பலிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்ட கதை

புராணங்களில் படித்தவை

பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன், தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான்.

யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான்.

அங்கே உறங்கிக் கொண்டிருந்த
உப-பாண்டவர்கள் ஐவரையும், பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். (உப-பாண்டவர்கள் – பாண்டவர்களின் மகன்கள்)

வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர்.

பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன், தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான் .

கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான்.

இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை வியாசமுனி தடுத்து, ஏவிய அஸ்திரங்களைத் திரும்பப் பெறக் கோருகிறார்.

திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ச்சுனன் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான்

அதனைத் திரும்பப்பெறத் தெரியாத அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல, அவன் அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான்.

உத்தரை கருவில் இறந்த குழந்தையைக் கரிக்கட்டை-சாம்பலாக பிரசவித்ததாகவும், கிருஷ்ணர் நீர் தெளித்து அந்த சாம்பலை உயிர்ப்பித்தார்* என்றும் கூறப்படுகிறது. அக்குழந்தைதான் பரீக்ஷித்.

கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீக்ஷித் எனும் பெயர்* வந்ததாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்