ஏடு தந்தானடி தில்லையிலே
ஏடு தந்தானடி தில்லையிலே – அதை
பாட வந்தேன் அவன் எல்லையிலே
இறைவனை நாட இன்னிசை பாட
திருமுறை கூறிடும் அறநெறி கூட
ஏட்டிலும் மூவரை எழுத வைத்தான் – அந்த
பட்டையும் அவனே பாட வைத்தான்
நாட்டையும் தமிழையும் வாழ வைத்தான் – அவன்
நமக்கென்று உள்ளதை வழங்கி விட்டான்
தந்தையும் தாயும் போல் அவன் இருப்பன் – ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
அவன் இன்றி எதுவுமே நடப்பதில்லை
அப்பரும் சுந்தரரும் சம்பந்தருமே – திரு
அருளுடன் பாடிய தேவாரமே
இப்புவியில் அனைவரும் அறிந்திடவே- அதை
செப்பிடும் சோழரின் பெருங்குலம