உன் ஆராதனை பொன்னலங்காரக்கோலம்
ஆனந்தம் ஆனந்தம் நான் கண்ட நேரம்
கண்பாரத போது என் பசிதாகம் மீறும்
பார்த்தாலும் இன்றெந்தன் பாவங்கள் தீரும் (உன்)
அபிஷேக நேரம் உன் அழகானரூபம் – அதைக்
கண்ட அடியார்க்கு வேறென்ன வேண்டும்
நெய் வந்து உந்தன் மெய்சேரும்போது
சரணம் உன்சரணம் சரணம் சரணம் எனப்பாட வேண்டும் (உன்)
பம்பாவின் நீரில் நான் நின்றாடும்போது
பதமான இதமான சுகமான இன்பம்
தலைமீது உந்தன் இருமுடியைத்தாங்கி
நடந்தேன் நடந்தேன் திருவாசல்தேடி (உன்)