21-ந்தேதி (செவ்வாய்) :
- ரம்பா திருதியை.
- கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (புதன்) :
- சதுர்த்தி விரதம்.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் ரத உற்சவம்.
- திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
- கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (வியாழன்) :
- முகூர்த்த நாள்.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
- திருவண்ணாமலை அருணா சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா, இரவு அதிகார நந்தியில் சுவாமியும், அன்னவாகனத்தில் அம்பாளும் பவனி வருதல்.
- பழனி மலை முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
- மேல்நோக்கு நாள்.
24-ந்தேதி (வெள்ளி) :
- முகூர்த்த நாள்.
- சஷ்டி விரதம்.
- திருவோண விரதம்.
- திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
- திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் ஆலயத்தில் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் இறைவன் வீதி உலா.
- உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
- மேல்நோக்கு நாள்.
25-ந்தேதி (சனி) :
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா, இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன
வாகனத்திலும் பவனி. - சுவாமிமலை முருகப்பெருமான் இடும்ப வாகனத்தில் பவனி வரும் காட்சி.
- பழனி முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
- மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (ஞாயிறு) :
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
- பழனி பாலதண்டாயுதபாணி புறப்பாடு கண்டருளல்.
- திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அன்ன வாகனத்தில் பவனி வருதல்.
- திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலில் காலை சேஷ வாகனத்தில் இறைவன் வலம் வருதல், இரவு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும்,
காமதேனு வாகனத்தில் அம்மனும் பவனி வரும் காட்சி. - மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (திங்கள்) :
- சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை விருட்ச வாகனத்திலும், இரவு பெரிய விருட்ச வாகனத்திலும் வீதி உலா.
- திருவெண்காடு, திருக்கழுக் குன்றம், திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
- திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொலு தர்பார் காட்சி.
மேல்நோக்கு நாள்.