அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)
Azhagendra sollukku muruga (2)
Undhan arulandri ulagile poruledhu muruga
(azhagendra sollukku muruga)
சுடராக வந்தவேல் முருகா – கொடும்
சூரரைப் போரிலே வென்றவேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)
Sudaraga vandhavel muruga
Kodum surarai porile vendravel muruga (2)
Kanikkaga manam nondha muruga (2)
Mukkaniyana thamizhthandha selvame muruga
(azhagendra … )
ஆண்டியாய் நின்ற வேல் முருகா – உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா – ஞானப்
பழமுன்னை யல்லாது பழமேது முருகா (அழகென்ற)
Andiyai nindravel muruga
Unnai andinor vazhvile inbame muruga (2)
Pazham nee appane muruga (2)
Gnanap pazham unnai alladhu pazhamedhu muruga
(azhagendra … )
குன்றாறும் குடிகொண்ட முருகா – பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீயல்லவோ முருகா
சக்தியுமை பாலனே முருகா – மனித
சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா (அழகென்று)
Kundrarum kudikonda muruga
Pakthar kurai neekkum vallal nee allavo muruga (2)
Sakthi umai balane muruga (2)
Manidha sakthikku ettatha thaththuvame muruga
(azhagendra … )
பிரணவப் பொருள் கண்டதிரு முருகா – பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
அரஹரா ஷண்முகா முருகா – என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)
Pranavap porulkanda thiru muruga
Param porulukku guruvana dhesiga muruga (2)
Aragara shanmuga muruga (2)
Endre paduvor ennaththil aduvai muruga
(azhagendra … )
அன்பிற்கு எல்லையோ முருகா – உந்தன்
அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா – எங்கள்
கலியுக வரதனே அருள்தாரும் முருகா (அழகென்ற)
Anbirku ellaiyo muruga
Undhan arulukku ellaithan illaiye muruga (2)
Kankandadheivame muruga (2)
Endhan kaliyuga varadhane arultharum muruga
(azhagendra … )
‘பத்மஸ்ரீ’ டி.எம். சௌந்தரராஜன் பாடிய ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ முருகன் பாடலின் வரிகள்.