குன்றக்குடி பதிகம் விளக்கம் | Kundrakudi Pathigam

குன்றக்குடி பதிகம் 10 பாக்கள் கொண்ட பதிகம் ஆகும். அழகு தமிழில் முருகன் புகழுரைக்கும் மாயூரகிரிப் பாடல்கள்

குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi pathigam

இந்தப் பதிகத்தின் மிக முக்கி சிறப்பு மற்றும் பலன் – குழந்தை வரம் வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல்,

ஏனெனில் இதிலுள்ள வரிகள்
1) என்றனுக்கு அறிவுடைய சிறுவர்தந்தருள் புரிகுவாய்
2) என்றனுக்குச் சிறுவர் உதவியே அருள் புரிகுவாய்
3) தனையர் தந்தருள் புரிகுவாய்
4) நன் மைந்தர் தந்தருள் புரிகுவாய் என்று வருகின்றன.
குடும்பத்தில் கணவன் , மனைவி இருவரும் அமர்ந்து முருகனை வேண்டி இந்தப் பதிகம் படித்து வர குழந்தை வரம் உறுதியாக கிடைக்கும்.

குழந்தை பெற்றவர்கள் என்ன செய்யலாம் ?
இது பதிகம், ஆகையால் அவ்வாறே படிக்கலாம் வேண்டுமெனில் சிறுவர் வருமிடத்தில்
செல்வமென மாற்றிக் கொள்ளலாம். செல்வம் 16 வகைப் படும் எனப் படித்துள்ளோம் . 16ல் எதை
முருகன் நமக்கு அருள வேண்டுமோ அருளட்டுமே ?
1) எனக்கு நற் செல்வம் தந்தருள் புரிகுவை
2) எனக்கு வலிவுடைய செல்வம் தந்தருள் புரிகுவாய்