27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள் – Parihara Trees for 27 Nakshatras

ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப வணங்க வேண்டிய தெய்வங்கள், அன்னதானம், பழங்கள், பறவை, சின்னம், அதிதேவதை, பரிகார ஸ்தலங்கள் போன்றவை நமது DIVINEINFOGURU.COM இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய பரிகார விருட்சங்கள் பற்றி பார்க்கப் போகிறோம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படி அவரவர் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினால் சகல தோஷங்களூம் விலகும். இதற்காக தான் ஒவ்வொரு கோவிலிலும் தல விருட்சங்கள் வைத்து வழிபட படுகிறது. இப்படிப்பட்ட நட்சத்திர விருட்சங்களின் ஈர்ப்பு சக்தியும், காந்த சக்தியும், தெய்வீகத் தன்மையும் அதிகம். எனவே ஏதாவது தோஷங்களுக்கு குறிப்பிட்ட தல விருட்சம் உடைய கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

27 நட்சத்திர மரங்களின் மூலம் எவ்வாறு தோஷ நிவர்த்தி அடைவது?

  • உங்களுக்கு உரிய நட்சத்திர மரங்களை உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவில், பூங்கா அல்லது நீங்கள் வசிக்கும் தெருவின் சாலையோரங்களில் வைத்து தினமும் அந்த மரத்திற்கு உங்கள் கைகள் வழியாக தண்ணீர் விட்டு பராமரித்து வளர்ப்பது.
  • உங்கள் நட்சத்திர மரங்களை தல விருட்சமாக கொண்டால் கோவில்களுக்கு சென்று வழிபடுவது.
  • நட்சத்திர மரங்களை தானமாக கொடுத்து வளர்ப்பது.
  • நட்சத்திர மரங்களின் சமித்துகளை உங்கள் வீட்டில், பூஜை அறையில், அலுவலகத்தில் அல்லது உங்கள் பர்சில் வைத்துக் கொள்வது.
  • உங்கள் நட்சத்திர மரங்களின் புகைபடங்களை உங்கள் ஃபோன்/கம்ப்யூட்டர் வால்பேப்பர் ஆக வைத்துக் கொள்வது.
  1. அஸ்வினி – எட்டி
  2. பரணி – நெல்லி
  3. கிருத்திகை – அத்தி
  4. ரோஹிணி – நாவல்
  5. மிருகசீர்ஷம் – கருங்காலி
  6. திருவாதிரை – செங்கரு
  7. புனர்பூசம் – மூங்கில்
  8. பூசம் – அரசு
  9. ஆயில்யம் – புன்னை
  10. மகம் – ஆலம்
  11. பூரம் – பலா
  12. உத்திரம் – அரளி
  13. ஹஸ்தம் – வேல்
  14. சித்திரை – வில்வம்
  15. ஸ்வாதி – மருதை
  16. விசாகம் – விளா
  17. அனுஷம் – மகிழம்
  18. கேட்டை – பிராய்
  19. மூலம் – மாமரம்
  20. பூராடம் – வஞ்சி
  21. உத்திராடம் – பலா
  22. திருவோணம் – எருக்கு
  23. அவிட்டம் – வன்னி
  24. சதயம் – கடம்பு
  25. பூரட்டாதி – தேமா
  26. உத்திரட்டாதி – வேம்பு
  27. ரேவதி – இலுப்பை.