குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் கன்னி | Kanni Guru Peyarchi Palan 2023 – 2024 in Tamil

குரு பெயர்ச்சி 2023 to 2024 பலன்கள் கன்னி | Kanni Guru Peyarchi Palan 2023 – 2024 in Tamil

வியாழன் கிரகம் தான் தேவர்களின் ‘குரு’ என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 1 வருடம் எடுத்துக் கொள்வார்.

அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், கன்னி ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன் 2023 – 2024

குருப்பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான் உங்க ராசிக்கு 7வது வீட்டான கலஸ்த்திர ஸ்தானத்திலிருந்து 8வது வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். இதனால், திருப்புமுனை நிறைந்த காலக்கட்டமாக இருந்தாலும், கவனம் சூழந்த காலக்கட்டமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், குருபகவான் உங்க ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்வது என்பது பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அள்ளிக்கொடுத்திருப்பார். ஆனால், இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு அப்படியே எதிர்மறையாக இருக்கும். அதிகளவிலான நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.

அஷ்டம குருவால் மனக்குழப்பங்கள் அதிகரித்து, இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும். அதேபோல், இந்த காலக்கட்டத்தில் தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடமும் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துபோவது நல்லது. மரண ஒப்பான கண்டங்கள் வந்து நீங்க வாய்ப்புள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும்போதும் நிதானம், கவனம் தேவை.

மற்றவர்களை நம்பி முக்கியமான விஷயங்களை ஒப்படைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடன் கொடுத்து உதவுவதை தவிர்க்க வேண்டும். இரண்டு கிரகங்கள் (ராகு, குருபகவான்) அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் அமரக்கூடிய இடம்தான் சரியில்லையே தவிர பார்க்ககூடிய 3 இடங்கள் அற்புதமாக இருக்கிறது. அதாவது குருபகவான் 5வது பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் வரவும் செலவும் சரிசமமாக இருக்கும். சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும். திருமண பாக்கியம் ஏற்படும்.

அதேபோல், குருபகவான் 7வது பார்வையாக தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தமானமான 2வது வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு, பிரச்சனை அனைத்தும் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் எதிரிகள் குறைவார்கள். சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத கன்னி ராசியினருக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

மேலும், குருபகவான் 9வது பார்வையாக தாயார் ஸ்தானம், சுகஸ்தானத்தை பார்ப்பதால், தாயாரிடம் இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி பாசம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தாய்வழி உறவினர்களால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலக்கட்டம். தம்பதிகளுக்குள் இருந்த வெறுப்பு விலகி, அன்பு, நெருக்கம் ஏற்படும். ஆகமொத்தம் ஒருபக்கம் அசுபலன்களை கொடுத்தாலும், மறுபக்கம் நல்ல பலன்களை கொடுப்பார்.