மகரம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | Makaram Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள்.

போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில், ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 மகரம் ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மகரம் ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் | Makaram Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

மகர ராசி நேயர்களே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடுகள் எடுப்பது உத்தமம்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – பொருளாதாரம் எப்படி இருக்கும்?

பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது. அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போதைய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கையிருப்பைக் கொண்டு செலவு செய்வதும், கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும் .நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை பெற்றார் உறவினர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் மன நிம்மதி குறையும். தேவையற்ற அலைச்சல் மன அழுத்தங்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும், எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுபவப் பலன் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – உத்தியோகஸ்தர்களுக்கு எப்படி இருக்கும்?

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்பதால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல்நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடம் மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, வேலை பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சற்று தாமதமாக செய்து முடித்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கான போதியம் தற்போது கிடைக்காவிட்டாலும், பணியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் சென்றால் பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் எந்த பணியிலும் முனைப்புடன் செயல்பட்டால் நல்ல வளர்ச்சியை அடைய முடியும்.

எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – தொழில் வியாபாரம் எப்படி இருக்கும்?

தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும், அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சனைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தூர பயணங்களை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் இருக்கும். வேலையாட்கள் சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே தொழிலில் அன்றாட செயல்களை சிறப்பாக செய்ய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால், அவர்களை சார்ந்து செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும்.

அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது. அப்படி செய்ய வேண்டும் என்றால், அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தற்போது இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால், தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்?

அரசியல்வாதிகளுக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – விவசாயிகளுக்கு எப்படி இருக்கும்?

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலை பெருக்க முடியும். இருந்தாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுமை ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலைக்கு இருப்பதால் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். பங்காளிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது தேவையற்ற பிரச்சனைகளில் தலைகீழாமல் இருப்பது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – பெண்களுக்கு எப்படி இருக்கும்?

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாத இருக்கவும். மன வயதை அடைந்தவர்களுக்கு நல்ல பலன் அமைந்து முயற்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் மகரம் – மாணவர்களுக்கு எப்படி இருக்கும்?

மாணவ மாணவிகளுக்கு மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை கொண்ட காலம் இது. எனவே முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்த ஒரு காரியத்திலும் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

அதிர்ஷ்ட நிறம்: நீளம் பச்சை

அதிர்ஷ்ட கிழமை: சனி புதன்

அதிர்ஷ்ட கல்: நீலக்கல்

மகரம் ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி 2023- 2025 பரிகாரம்

Navagraha Lords Tamil Mantras – நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்

ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது