கண் திருஷ்டி எதிரி தொல்லை தீர | Kadugu Pariharam

இனி எதிரியின் தொல்லையே இல்லாமல் நிம்மதியாக வாழலாம். எதிரி தொல்லையிலிருந்து விடுபட வெறும் 1 கைப்பிடி கடுகு போதும்.

உங்களுடையை வாழ்க்கையில் நீங்கள் அதி விரைவாக முன்னேறி வருகிறார்கள் என்றால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரிந்த மற்றும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் எண்ணிக்கையும் கூடவே அதிகரித்துக் கொண்டே செல்லும்.

குறிப்பாக நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டே செல்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் சம்பாதித்துக் கொள்கிறீர்கள். எதிரி தொல்லை இல்லாமல் நிச்சயமாக ஒருவனால் வாழ்க்கையில் வாழவே முடியாது.

குறிப்பாக முன்னேற்றப் பாதையில் செல்பவர்களுக்கு தான் இந்த எதிரி பிரச்சனை அதிகமாக இருக்கும். அதாவது சீக்கிரம் ஒருத்தர் தங்கள் முயற்சியால் வசதி வாய்ப்புகள் என்று அடைகிறார்களோ, அவங்களை சுற்றி இருப்பவர்களே, அவர்களுக்கு எதிரியாக மாறி விடுவார்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களும், உங்களுடைய முன்னேற்றத்தைப் பார்த்து உங்களுக்கு எதிரியாக மாறிவிட்டார்களா? உங்கள்மீது பொறாமை எண்ணத்தையும் வயிற்றெரிச்சலையும் கொட்டுகிறார்களா?

இதுவே உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால், ஒரு பிடி கடுகை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள் போதும். எதிரியின் கண் பார்வையிலிருந்து சுலபமாக தப்பித்து விடலாம்.

  • வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகை இதற்காக பயன்படுத்த வேண்டாம்.
  • கடையிலிருந்து பரிகாரத்திற்கு என்று புதியதாக கடுகை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த கடுகிலிருந்து 51 கடுகு மட்டும் எண்ணி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • இந்த 51 கடுகை ஒரு கருப்புத் துணியில் போட்டு கருப்பு நூலால் முடிச்சு போல கட்டிக்கொள்ள வேண்டும்.
  • கடுகு உள்ள இந்த முடிசினை உங்கள் உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு, மனதார உங்களுடைய கண்ணுக்கு தெரிந்த எதிரி கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருந்தாலும், அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று மனமுருகி பிரபஞ்சத்திடம் கூறி, இந்த முடிச்சு சிறிய ஒரு மண் அகல் விளக்கில் வைத்து விடுங்கள்.
  • பெரியதாக இருக்கக் கூடிய ஒரு கட்டி கற்பூரத்தை இந்த முடிச்சோடு வைத்து கொளுத்தி விட வேண்டும். அவ்வளவு தான்.
  • இந்த கடுகு அந்த நெருப்பில் எப்படி பட்டு பட்டுன்னு பொறிந்து வருகின்றதோ அதேபோல உங்கள் எதிரிகளின் பொறாமை குணம், உங்கள் மேல் விழுந்த கண்திருஷ்டி அத்தனையும் வெடித்து போய்விடும்.
  • இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் எதிரிகள் உங்களை விட்டு விலகி விடுவார்கள்.
  • உங்களுக்கு எதிராக அவர்கள் எதிர்மறை ஆற்றல்களை தூண்டிவிட்டு இருந்தாலும் அது உங்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்காது.
  • இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் எந்த கிழமையில் செய்தால் நல்லது. ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டிலேயே செய்யலாம்.
  • பூஜை அறையில் செய்ய வேண்டாம். பூஜை அறை தவிர மற்ற இடங்களில் இந்த பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்.
  • தொடர்ந்து மூன்று வாரம் செய்தாலே உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் எதிரிகள் உங்களை விட்டு விலகுவதை நிச்சயம் உங்களால் உணரமுடியும்.