Noi Theerkkum Kal Uppu Pariharam | தீராத நோய் தீர்க்கும் கல் உப்பு பரிகாரம்:

உங்களுடைய உடலில் நீண்ட நாட்களாக தீராத நோய்கள் இருந்தால், அதற்காக மருத்துவரிடம் சென்று அந்த நோய் தீருவதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தால், நீங்கள் மாரி அம்மன் வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களில் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விட்டு அம்மனை மனமுருகி வணங்கி வேண்டி, கல் உப்பை கோவிலில் கல் உப்பு செலுத்தும் இடத்தில் கொட்டி வர வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்களது உடலில் இருக்கும் நோய்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். உப்பு கரைவது போல உடம்பில் உள்ள நோய்களும் கரைய ஆரம்பிக்கும்.