Noi Theerkkum Nellikkai Pariharam | நோய் தீர்க்கும் நெல்லிக்காய் பரிகாரம்

நெல்லிக்காய், இயற்கையிலேயே ஒரு மருத்துவ குணம் மிக்க ஒரு கனி. ஒருவரின் நோய் குணமாக மருத்துவ குணம் மிக்க நெல்லிக்காய் கொண்டு, பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ள படி வழிபாடு செய்ய நோய்கள் விரைவில் குணமாகும்.
உங்களுடைய பூஜை அறையில் இருக்கும் உங்கள் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் செய்து உங்களுடைய பிரார்த்தனையை சொல்லி மனமுருகி வழிபட வேண்டும்.
பின் பூஜை முடிந்ததும் அந்த மலை நெல்லிக்காயை தெய்வ பிரசாதமாக சாப்பிட்டு வரவேண்டும்.
குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு உங்களின் நோய்கள் சீக்கிரம் குணமடையும். லட்சுமிதேவியின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.