புனர்பூ தோஷம் பரிகாரம் | Punarphoo Dosha Remedy

புனர்பூ தோஷம் பரிகாரம் | Punarphoo Dosha Remedy

புனர்பூ தோஷம் என்றால் என்ன??

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது:

  • சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது.
  • சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது.
  • சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது.
  • சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது.
  • பொதுவாக கடக ராசிக் காரர்களுக்கு புனர்பூ தோஷம் என்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

புனர்பூ தோஷத்தை போக்கக் கூடிய எளிய பரிகாரங்கள்:

  • சந்திரனின் ஸ்தலமான திருப்பதியில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதியை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் சந்திரனின் ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாட்களிலும், சனி பகவானின் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களிலும் தரிசனம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.
  • சனிக்கிழமையிலோ அல்லது சனி பகவானின் நட்சத்திர நாட்களில் வரும் பௌர்ணமியில், சத்தியநாராயண விரத பூஜை செய்வதால் சனி மற்றும் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் பிரச்னைகளை நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை பெற முடியும்.
  • சந்திரனின் காரகமாகிய உணவினை சனியின் காரகம் பெற்ற உழைப்பாளிகள், உடல் ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியவர்களுக்கு அன்னதானம் செய்துவர புனர்பூ தோஷம் நீங்கும்.
  • அதே போல, ஊனமுற்றஎளிய வர்க்கதிதில் உள்ள திருமணம் ஆகாதவர்களுக்கு அவர்களுக்கு தேவையான திருமண செலவில் உங்களால் இயன்ற பங்களிப்பை அளிப்பது. அவர்களுடைய திருமணத்திற்கு உதவி செய்வது போன்றவற்றை செய்ய புனர்பூ தோஷ பாதிப்புகள் குறையும்.
  • புனர்பூ தோஷத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள் திங்கட்கிழமைதோறும் விரதமிருந்து, ஒன்பதாவது திங்கட்கிழமை திருச்செந்தூர் முருகன் அல்லது உங்கள் பகுதியிலுள்ள வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட்டு வர தோஷம் நீங்கும். ஒன்பது வாரத்திற்குக் குறையாமல் விரதமிருப்பது அவசியம்.

புனர்பூ தோஷம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சனியின் மந்திரங்களை அனுதினமும் கூறி வர புனர்பூ தோஷம் பாதிப்புகள் நீங்கும்.

சனி காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே
கட்க ஹ’ஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

சனி ஸ்துதி

நீலாஞ்சன சமா பாசம்
ரவிபுத்ரம் யமாக்ஞ்ரஜம்
சாய மார்த்தாண்ட தம் பூதம்
தம் நமாமி சனைஸ்வரம்

Remedies for Punarphoo Dosha

Shani Sthuthi