2023 சனிபெயர்ச்சி | கன்னி ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கன்னி ராசி அன்பர்களே!

கன்னி ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் ஆறாம் இடமான ரண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான முயற்சிகளும் எண்ணங்களும் அதிகரிக்கும்.

வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் விரயம் குறையும். தடையாக இருந்தவர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளிலும், புதிய உணவு சார்ந்த விஷயங்களிலும் கவனமுடன் இருக்க வேண்டும். 

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான விரய ஸ்தானத்தை பார்ப்பதினால் நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவும், புரிதலும் கிடைக்கும். பொதுநல பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். செய்தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகும். நெருக்கமானவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான சகோதர ஸ்தானத்தை பார்ப்பதினால் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வீட்டில் பழுது தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்னைகள் நிவர்த்தியாகும். புது சொத்து வாங்கி வீடு கட்டுவீர்கள். இல்லையென்றால் இருக்கும் இடத்தை பெரிது செய்வீர்கள்.

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தியும், அனுகூலமும் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. விளையாட்டு தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

சனி ராசிக்கு ஆறாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சில நேரங்களில் தெளிவின்மையான சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை ஏற்படும். மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணம் மேம்படும்.

பெண்களால் யோகம் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு மகிழ்வீர்கள். புதிய முதலீடுகள் அதிகரிக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான புதிய நவீன பொருட்களை வாங்கி வீட்டை அழகுப்படுத்துவீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். 

மாணவர்களுக்கு கல்வி ரீதியான சுற்றுலா பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சில மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். 

உத்தியோக பணிகளில் திறமைகளும், கௌரவமான பதவிகளும் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.

பொருளாதாரம்

தனவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கி தொடர்பான கடன்கள் சாதகமாக அமையும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய மனை, வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கமிஷன் தொடர்பான துறைகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். செரிமான உபாதைகள் ஏற்படலாம். ஒரு சில செயல்களில் தீவிரமான சிந்தனைகளை குறைத்து கொள்வது மனதிற்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்.

சகோதர வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். உறவினர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் குறையும். 

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மேலும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நபர்களினால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களிலும் காப்பீடு சார்ந்த செயல்பாடுகளிலும் கவனம் வேண்டும். மேலும் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் தூக்கமின்மை ஏற்படும்.

வழிபாடு

சிவபெருமானுக்கு வில்வ இலைகளை சமர்ப்பித்து அர்ச்சனை செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். அருகில் இருக்கும் எல்லை தெய்வத்தை சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சிக்கலான பிரச்சனைகள் விரைவில் அகலும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.