செவ்வாய் கிரக காரகத்துவங்கள் | Sevvai Graha Karagathuvam in Tamil

செவ்வாய் கிரக காரகத்துவங்கள் | Sevvai Graha Karagathuvam in Tamil

நவ கிரகங்களில் சகோதர காரகன் என்று சொல்லக் கூடிய செவ்வாய் பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பெண்ணிற்கு கணவன், சகோதரன், மைத்துனன், வீரம், ஆபத்து மிகுந்த காரியங்கள், விளையாட்டு, சீருடைப் பணியாளர், காவல், ராணுவம் போன்ற பாதுகாப்பு பணிகள், பூமி, மனை, சமையல் கூடம், ரியல் எஸ்டேட், முட்செடி, புதர்கள், வரட்சியான நிலங்கள், செம்மண், சண்டை, பகைமை, தாக்குதல், விபத்து, ரத்தம், ரத்தக் காயங்கள், ஆயுதங்கள், வெடிமருந்து.

வெடி விபத்து, ரசாயனம், அதிக ஆபத்தான நெருப்பு, ஆணவம், ஆத்திரம், கோபம், பிடிவாதம், இயந்திரங்கள், புஜபலம், உடல் வலிமை, கட்டுமஸ்தான உடல், பற்கள், மின்சாரம், நெருப்பு தொழில், ஆயுதம், மோட்டார் பைக், வழக்கு, அறுவை சிகிச்சை, தற்காப்புக் கலைகள், வேதிப்பொருட்கள், ஆன்மீகம், வேப்பமரம், தென்னை மரம், தபால் நிலையம்.

பார்சல், கோ டோன், தளபதிகள், மாவீரர்கள், புரட்சியாளர்கள், பகைவரை வெல்லுதல், பிறந்த மண், ராஜதந்திரம், யுத்தம், பாலம், வீண் வதந்தி, முருக்கு மீசை, பவள ஆபரணம், கடுஞ்சொற்கள், விடாமுயற்சி, தோட்ட காவலாளி, செந்நிற பிரியர், விவசாயம், கத்தி, கத்திரிக்கோல், பெரிய தொழிற்சாலை, கோடாரி, ஊர் நாட்டாமை, செங்கல் சூளை, சுரங்கம்.

வில்வித்தை, கல் உடைத்தல், கிரிமினல் லாயர், கராத்தே சிலம்பம் போன்ற பயிற்சி, மாந்திரீகம் கலந்த ஜோதிடம், தச்சர், வன அலுவலர், பொற்கொல்லர், மெடிக்கல் ஷாப், மருந்து விற்பவர் தயாரிப்பாளர், மாதவிடாய் கோளாறு, தாசில்தார், ரத்த வங்கி, இறைச்சி விற்பவர், வெட்டுக்காயம், புருவம் நகம், ரத்த சிவப்பணுக்கள்.

வீரியத்தன்மை, திடீரென்று நோய் படுதல், மூளையில் ரத்த நாளங்களில் வெடிப்பு, இஞ்சி, மூங்கில், மிளகாய் வத்தல், நாய், மரக்கடை, புலி, டீக்கடை, பார்பர் ஷாப், ஜிம்.