வாஸ்து குறிப்புகள் | Vastu Tips

வாஸ்து குறிப்புகள் | Vastu Tips

  • வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.
  • வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம்.
  • மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது.
  • வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது.
  • வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது.
  • மனையில் வீடு கட்டும் போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து நீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். வீட்டின் மத்தியிலும் மற்ற திசைகளில் அமையும் கிணறு, பம்ப் தீய பலன்களைத் தரும்.
  • வீட்டின் தெற்கும், மேற்க்கும் குறைந்த இடமும், வடக்கு, கிழக்கில் அதிக இடமும் விட்டு கட்ட வேண்டும்.
  • வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
  • தென்மேற்கு மூலை 90 டிகிரி சரியாக இருக்க வேண்டும்.
  • வீட்டின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு உயர்ந்தும் வடக்கு, கிழக்கு, வடகிழக்குப் பகுதி தாழ்ந்தும் இருக்க வேண்டும்.
  • பஞ்சபூத ஆற்றல் கிடைக்க ஈசானிய மூலை காலியாக இருக்க வேண்டும். மாலையில் விளக்கேற்ற சுபிட்சமுண்டாகும்.
  • வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் அமைய வேண்டும். வீட்டிற்கு ஜன்னல், கதவுகள் இரட்டைப்படையில் இருப்பதே நல்லது.
  • கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செல்ல வேண்டும். கழிப்பிடம் தெற்கு அல்லது வடக்கு நோக்கி அமருமாறு அமைய வேண்டும். செப்டிக் டேங்க் வடமேற்கு அல்லது தென்கிழக்கே காம்பவுண்டு சுவரை தொடாமல் கட்ட வேண்டும்.
  • தென் மேற்கு அல்லது வடமேற்கு மூலையில் நீர் உபயோகத் தொட்டி அமைய வேண்டும்.
  • அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் அமைவது நல்லது.