குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
சரணம் – 1
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
சரணம் – 2
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
குழு வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா ( இசை )
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
குழு வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா