பந்தளபாலா ஐயப்பா – Pandhala Bala Ayyappa

பந்தளபாலா ஐயப்பா
பரமதயாளா ஐயப்பா
பரமபவித்ரனே ஐயப்பா
பக்தருக்கருள்வாய் ஐயப்பா!

நித்ய ப்ரம்மசாரியே நின் சரங்குத்தி ஆலில்
எத்தனை கன்னிச்சரமோ ஸ்வாமியே ஐயப்பா!

ஞான வடிவே ஞானமூர்த்தி சுதனே
ஞானஒளி அருள்வாய் ஸ்வாமியே ஐயப்பா!.

பம்பையில் பிறந்து பந்தளத்தில் வளர்ந்து
பன்னிரெண்டு காலமும் ஸ்வாமியே ஐயப்பா!

சத்திய சொரூபனே சபரிகிரி வாசனே
சாம்பசிவன் மைந்தனே ஸ்வாமியே ஐயப்பா!

கண்ணனின் மைந்தனே கரிமலை வாசனே
காத்து ரட்சிப்பவனே ஐயனே ஐயப்பா!

சின்மய ரூபனே சிக்கல் தீர்ப்பவனே
சித்தர்கள் தினம் போற்றும்
செல்வனே ஐயப்பா!

வல்லமை தருவோனே வைத்தீஸ்வரன் மகனே
வற்றா அமுத ஊற்றே
வையகத்து ஐயப்பா!

கட்டிக்கரும்பே தேனே!! கண்கண்ட தெய்வமே!!
கருணை புரிவாயே கடவுளே ஐயப்பா!!