ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே
சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே
orunAL un thirukkOyil varuvEnE
(orunAL … )
sivakumarA un malarpAdham maRavEnE
(orunAL … )
(orunAL … )
குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2)
என் அறியாமை நினைகண்டு அகலாதா (2)
(ஒருநாள் … )
kuRai yAvum theerkkindra gurunAdhA (2)
en aRiyAmai ninaikaNdu agalAdhA (2)
(orunAL … )
தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் (2)
என் தாயாகி தமிழ் தந்து வளர்த்தாயே நீ (2)
ஒருகோடி கவி பாடி உனைபோற்றுவேன் (2)
உன் அருளாளே வருகின்ற துயர் மாற்றுவேன் (2)
(ஒருநாள் … )
thavamEdhum seyyAdha siRupiLLai nAn (2)
en thAyAgi thamizh thandhu vaLarththAyE nee (2)
orukOdi kavi pAdi unaipOtruvEn (2)
un aruLALE varugindra thuyar mAtruvEn (2)
(orunAL … )
வண்டோதும் மலர்ச்சோலை மருதாசலம்
நன் வந்துன்னை காண்கின்ற வழிகாட்டுவாய் (2)
தண்டூண்றும் தனிக்கோலம் விருந்தாகுமே (2)
நீ தருகின்ற ஞானப்பால் மருந்தாகுமே (2)
(ஒருநாள் … ).
vaNdOdhum malarchchOlai marudhAsalam
nan vandhunnai kANgindra vazhikAttuvAi (2)
thaNdUNRum thanikkOlam virundhAgumE (2)
nee tharugindra gnAnappAl marundhAgumE (2)
(orunAL … ).