காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!
(காலை இளம் கதிரில்)
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலை ஆகுது கதி ஆகுது!
(காலை இளம் கதிரில்)
(முதல்)
மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது – அந்தக்
கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது
குமரா உனை மனம் நாடுது; கூத்தாடுது!
(காலை இளம் கதிரில்)
சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது – சிவ
சுப்பிரமண்யம் சுப்பிரமண்யம் என்று சொல்லுது
சுகம் ஆகுது! குக நாமமே! சொல் ஆகுது!!
(காலை இளம் கதிரில்)
வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது
“வெற்றி வேல், சக்தி வேலா” என்றே சேவல் கூவுது
“சக்தி வேல் சக்தி வேல்” என்றே சேவல் கூவுது
வினை ஓடுது! வடி வேல் அது, துணையாகுது!!
(காலை இளம் கதிரில்)
பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது
குருநாதனே முருகா …
(காலை இளம் கதிரில்)