ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு | Aadhi Parameswariyin Lyrics in Tamil

ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு
ஆதி பரமேஸ்வரியின் ஆலயமே வேற்காடு
அன்னையவள் திருப்புகழை தினம் நீ பாடு (ஆதி

குங்குமத்தில் கோவில்கொண்டு தெய்வமாய் குடியிருப்பாள்
மங்கையர்க்கு திலகமிட்டு அன்னையாய் துணையிருப்பாள்
மங்கலமே வடிவெடுத்து மாதரசி வீற்றிருப்பாள்
மங்காத நிலவாக எந்நாளும் ஒளி கொடுப்பாள்
எந்நாளும் ஒளி கொடுப்பாள்

அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கும்
அன்னையிடம் நாகம் பக்தியுடன் குடை பிடிக்கும்
அபிஷேகம் பால் மழையில் தேவி அவள் மனம் களிக்கம்

நம்பிவரும் எல்லோர்க்கும் நல்ல தொரு வழி பிறக்கும்
நாயகி திருவருளே பொன்னான வாழ்வளிக்கும் (ஆதி

வேற்காடு திருத்தலமே வந்தவர்ககு புகழ் கொடுக்கும்
வெற்றிதரும் திருச்சாம்பல் கொண்டவர்க்கு பலன் கிடைக்கும்
கருமாரி திருப்பதமே வேண்டிவந்தால் வரம் கொடும்
கற்பூர ஜோதியிலே எந்நாளும் அருள் கிடைக்கும்
எந்நாளும் அருள் கிடைக்கும் (ஆதி