மகமாயி மனசுவச்சா | Magamayi Manasuvacha

மகமாயி மனசுவச்சா | Magamayi Manasuvacha

மகமாயி மனசுவச்சா மங்களமாய் வாழ வைப்பான்
ஈஸ்வரியால் இரக்கம் கொண்டு எல்லோர்க்கும் வாழ்வளிப்பாள்
அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்
அந்த கருமாரி கண்பார்த்து காலமெல்லாம் காத்தருள்வாள்
கருமாரி கருணையினால் கவலை பறக்குது – அவள்
கண் திறந்து பார்ப்பதினால் செல்வம் பெருகுது
எந்நேரம் அவள் நாமம் உரைத்தாலே
எந்த துன்பம் வந்தாலும் சென்று மறையுது (கருமாரி)

ஓம்சக்தி சொல்லுக்குள்ளே உறைந்திருப்பாளாம்
உலகையெல்லாம் காத்து என்றும் அருள் புரிவாளாம்
உயிருக்குள் உயிரை வைத்து காத்து நிற்பாளாம்
வாழ்வுக்கு வளமை எல்லாம் தந்திடுவாளாம் (கருமாரி)

நெருப்பெல்லாம் அவள்முன்னே பூவாக மாறும்
நெஞ்சுருக பாடிச்சென்றால் அவள் அருள்மழை பொழியும்
சூலமும் சக்தியும் அவள் கரத்தில் ஜொலிக்கம்
சுற்றும் பகைநீக்கி அவை நம்மை வந்து காக்கும் (கருமாரி)