தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi

தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi

நெஞ்சத்தில் குடிபுகுந்தாய் எங்கள் கருமாரி
நின்பாதம் சரணடைந்ததோம் எங்கள் கருமாரி
தஞ்சமென்று வந்து விட்டோம் எங்கள் கருமாரி
தயவுடனே காத்திடுவாய் எங்கள் கருமாரி
வஞ்சகரை மாய்த்திடுவாய் எங்கள் கருமாரி
வந்தவினை தீர்த்திடுவாய் எங்கள் கருமாரி
மஞ்சள் பூசி மகிழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரி
மங்கலமாய் வாழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரி
துணையிருந்து காத்திருப்பாள் எங்கள் கருமாரி
துன்பமெல்லாம் போக்கிடுவாள் எங்கள் கருமாரி
பிணியகற்றும் தெய்வமகள் எங்கள் கருமாரி
பெயர் விளங்க செய்திடுவாள் எங்கள் கருமாரி
அணையாத ஜோதியவள் எங்கள் கருமாரி
ஆதி பராசக்தியவாள் எங்கள் கருமாரி
இணையில்லா சக்தியவள் எங்கள் கருமாரி
எங்கள் குறை தீர்த்திடுவாள் எங்கள் கருமாரி
வேற்காடு வாழ்ந்திருப்பாள் எங்கள் கருமாரி
வீரனுக்கு அன்னையவள் எங்கள் கருமாரி
பொற்பாதம் பணியவந்தோம் எங்கள் கருமாரி
பொங்குபுகழ் கொண்டவளாம் எங்கள் கருமாரி
நாற்கவியும் பொழிந்துன்னை எங்கள் கருமாரி
நாவார வாழ்த்திடுவோம் எங்கள் கருமாரி
பாற்கடலாய் நின்கருணை எங்கள் கருமாரி
பரவுதம்மா நின்பெருமை எங்கள் கருமாரி
நிலம் வாழ வந்தவளாம் எங்கள் கருமாரி
குலம் தழைக்கச் செய்திடுவாள் எங்கள் கருமாரி
கூறுவினை தீர்ப்பவளாம் எங்கள் கருமாரி
நலம் கொடுக்கும் நாயகியாம் எங்கள் கருமாரி
நல்வழி சேர்ப்பவளாம் எங்கள் கருமாரி
சலங்கையொலி கேட்டிடவே எங்கள் கருமாரி
தயவுடனே வந்திடுவாள் எங்கள் கருமாரி
எங்கள் கருமாரி அவள் எங்கள் கருமாரி.

கருமாரியம்மன் 108 போற்றி | Karumariamman 108 Potri in Tamil

Sri Devi Karumaariyamman Prayer Mantra Thuthi

தேவி கருமாரியம்மன் துதி | Goddess Karumariamman Sthuthi

Mariamman Archanai Mantra lyrics Tamil

Karumariamman 108 Potri