பெண் தாயே கருமாரி | Pen Thaaye Karumaari

பெண் தாயே கருமாரி | Pen Thaaye Karumaari

பெண் தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி

பெண் ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே)
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம் (தாயே)
சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா