ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil

ஸ்ரீ தேவி ஹாரத்தி பாடல் வரிகள் | Sri Devi Harathi Song Lyrics in Tamil

ஜெய ஜெய ஜெய சக்தி ஓம் ஸ்ரீ ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய ஜெயவென பாடி பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா. (ஓம் ஸ்ரீ)

திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க தேவை யெல்லாம் அடைய அம்மா
பக்தி பெருகிட பாடி உருகிட பணிப்பாய் அன்பில் எமை (ஓம் ஸ்ரீ)

இரண்டுகள் போக மூன்றுகள் கலக்க ஈஸ்வரி வரம் அருள்வாய் கரங்குவித்தோமினி காலை விடோமம்மா கருணையுடன் அணைப்பாய் (ஓம் ஸ்ரீ)

காசினில் எங்கும் வேற்றுமை போக கருத்தினில் அன்பருள்வாய்
தேஜசுடன் வாழ காட்டி காட்சி தேவி அடைக்கலமே அம்மா (ஓம் ஸ்ரீ)

நமஸ்காரம் இருவினை கரத்தினில் ஞான
நல்லொளி தீபம் வைத்து அம்மா நமஸ்காரம் செய்து ஹாரத்தி எடுத்தோம் ஞாலத்துக்கு அமைதியை தா,

ஓம் கணபதி சிவ ஷண்முக நாதா
ஓம் த்ரிகுண தீ தா க்ருஷ்ணா
ஓம் த்ரிகுண தீ தா ஓம் ஸ்ரீ
ராம மஹாதேவ சம்போ ஓம் ஜய ஜகத் ஜனனி