வேற்காடு வாழ்ந்திருக்கும் | Verkadu Vaazhnthirukum Amman Songs
வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்
வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்
பாற்கடலாய் அவள் கருனை பெருகிடவே செய்திடுவாள்
பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)
தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வமகள்
போராடும் பாவங்களை பறந்தோடச் செய்பவளாம்
திருச்சாம்பல் அணிந்தோரை திடமுடனே காப்பவளாம்
திருமாலின் சோதரியாம் கருநாக ரபிணியாம் (வேற்காடு)
எங்கும் நிறைந்தவளாம் ஏகாந்த ரூபிணியாம்
மங்களமாய் வாழ்வளிக்கும் மணிகண்டன் தாயவளாம்
சங்கரன் முதல் நாரணனும் பணிந்திடும் பரதேவதையாம்
பங்கஜம் முகம் கொண்டவளாம் பரமசிவன் நாயகியாம் (வேற்காடு)