Engengum Ayyappa Kosham – Ayyappan Songs

எங்கெங்கும் ஐயப்பகோஷம் கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும் உன்திரு சன்னதியில்
எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா (எங்)

எப்போதும் உன்னைநினைக்க உள்ளது உள்ளமய்யா
என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா
என்தேகம் என்கின்ற கோவிலில் இருப்பது உன்ரூபம்
என்நாவில் எப்போதும் உன்கீதமய்யா (எங்)

ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவமென்ன
வெவ்வேறு வேஷங்கள் போட்டு நி செய்யும் கோலமென்ன
இனிமேலும் இன்னொரு ஜென்மம் வேண்டாம் ஐயனே
படைத்தால் உந்தன் கோவில் மணியாய் படைப்பாய் தேவனே (எங்)