என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க (என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி
பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்)
ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்)
ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)