108 வரிகளில் எளிய தமிழில் ராமாயணம் | Simple Ramayanam in 108 lines
வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
- அசல நிர்குண ஆத்ம ராமா
- ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
- இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
- இகத்தில் அசுரரை அழித்திட ராமா
- பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
- கூடவே பிறந்த தசரத ராமா
- வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
- யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
- விசுவாமித்திரன் வேண்டிட ராமா
- சென்று மந்திரம் கற்றனை ராமா
- சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
- லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
- முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
- மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
- பாலப் பருவம் கடந்திட்ட ராமா
- பக்தன் ஞானி ஜனகன் ராமா
- மகளா முலகத் தாயவள் ராமா
- உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
- கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
- அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
- மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
- முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
- ஜானகி தேவியை மணந்தாய் ராமா
- பரசுராமன் பலம்பறி ராமா
- அயோத்தி யடைந்த சுந்தர ராமா
அயோத்யா காண்டம்
- பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
- கைகேயி ஏவலால் தசரதன் ராமா
- வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
- சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
- நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
- முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
- தசரதன் மாளப் பரதனும் ராமா
- சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
- சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
ஆரண்ய காண்டம்
- தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
- முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
- துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
- தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
- பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
- சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
- கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
- ராவணத் துறவி சீதையை ராமா
- மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
- கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
- அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
கிஷ்கிந்தா காண்டம்
- அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
- அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
- தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
- வானர வீரன் அநுமான் ராமா
- தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
- கணையாழி அடையாளம் தந்தனை ராமா
- அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
- ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
- மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
- அடியவன் அநுமான் நின்றான் ராமா
சுந்தர காண்டம்
- அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
- லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
- நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
- அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
- தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
- ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
- லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
- கண்டேன் சீதையை என்றனன் ராமா
- தேவியின் முடிமணி தந்தனன் ராமா
யுத்த காண்டம்
- தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
- வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
- விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
- ஆழிக் கணையும் கட்டினை ராமா
- அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
- அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
- தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
- அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
- கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
- இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
- அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
- விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
- ராவணன் கவசம் பேதித்த ராமா
- ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
- அழியா முக்தி தந்தாய் ராமா
- விபீஷணன் முடிசூட்டினை ராமா
- கண்டே சீதையை அணைந்தாய் ராமா
- புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
- பரதன் உயிரைக் காத்தனை ராமா
- அயோத்தி புகுந்து குடிகளை ராமா
- ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
- பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
- பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
- மாயப் பழியது தீர்க்கும் ராமா
- கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
- கவிவரன் வால்மீகி பாடிய ராமா
- லவகுசர் தந்தை யாகிய ராமா
- அசுவ மேதம் நடத்திய ராமா
- கோமள ஜானகி நாயக ராமா
- மறைகள் போற்றிடும் மன்மத ராமா
- பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
- ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
- துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
- நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
- பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
- முனிவர் கதையும் முடிந்ததே ராமா
- பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
- கதிரவ குலத்துத் திலகமே ராமா
- பயமழி மங்கள புங்கவ ராமா
- நரஹரி ராகவ நாரண ராமா
- அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
- அநுமானிதயத் துறையும் ராமா
- ராம ராம ஜய ராஜா ராமா
- ராம ராம ஜய சீதாராமா.