Gokulathil Oru Naal Radhai Song Lyrics
Gokulathil Oru Naal Radhai Song Lyrics in Tamil from Krishna Ganam. Gokulathil Oru Naal Radhai Song Lyrics has written in Tamil by Kannadasan.
பாடல் வரிகள்:
கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்தபாலன் வந்தான்
தான் ஒரு ஆனந்த ராகம் தந்தான்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்தபாலன் வந்தான்
தான் ஒரு ஆனந்த ராகம் தந்தான்
கோபியர் தம்மை தொட்டு
கொஞ்சிய கைகள் எந்தன்
கூந்தலை தொட வேண்டாம்
கோபியர் தம்மை தொட்டு
கொஞ்சிய கைகள் எந்தன்
கூந்தலை தொட வேண்டாம்
நான் கோடியில் ஒன்று அல்ல
கோவிலின் பெண்ணை என்னை
கொஞ்சிட வர வேண்டாம்
கோவிலின் பெண்ணை என்னை
கொஞ்சிட வர வேண்டாம்
இனி என் கோலமும் கெட வேண்டாம்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்தபாலன் வந்தான்
தான் ஒரு ஆனந்த ராகம் தந்தான்
ராதையின் ஊடலுக்கும்
கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்
ராதையின் ஊடலுக்கும்
கீதை படித்த கண்ணன்
கோதையை வசியம் செய்தான்
கோதையை வசியம் செய்தான்
அங்கு சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள்
மேனியை தொடவும் செய்தான்
அங்கு சோலை யமுனை வெள்ளம்
துள்ளி எழுந்து அவள்
மேனியை தொடவும் செய்தான்
கண்ணன் நீண்டொரு கலகம் செய்தான்
கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்தபாலன் வந்தான்
தான் ஒரு ஆனந்த ராகம் தந்தான்