Kulaluthum Guruvayur – Lord Krishna Songs

Kulaluthum Guruvayur – Lord Krishna Songs

குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே

குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்
உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே
பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம் (குழலூ)

 

விப்ரபூஜ்யம் விஷவவர்த்யம் விஷ்ணு சம்பூர் ப்ரியம் சுதம்
விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்
யமுனாவின் கரையோரம் குழலோசையே கேட்டு
எழில் ராதை உடன் சேர்ந் இசை பாடுவாள்
பசும்சோலை அதில்மறைந்து விளையாடுவான்
வருவாய் கண்ணா வருவாய் கண்ணா
என்றே ராதை உனைத் தேடுவாள்
வண்டு விழிப்பேரெழிலை ஆயர்கள் குழக்கொழுந்து
வண்ணமுகில் கண்ணனவன் கண்டுரசிப்பான்
வாரி அணைப்பான் (குழலூ)

 

மதுராபுரி மாதவனே மதுசூதனா
வராபுரி கிரிதாரி உடுப்பி கிருஷ்ணா
குருவாயூர் தனில் வாழும் நவநீதனே
சமதர்மம் நிலையாகும் உன்ஆலயம்
சகலருமே வணங்கும் பொதுஆலயம்
ஒருமுறை இது சமயம் நிறைகுடம் துதித்திடவே
வரம் தரவேண்டுகிறேன் குருவாயூரப்பாகோபாலா (குழலூ)