ஆதிலட்சுமி தேவிக்கு | Aadhi Lakshmi Deviku Song Lyrics
ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டு
பூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை…..திருமகளே…..
திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!
(திருவிளக்கை)
வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே திருசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அட்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!!
மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!
சங்கு சக்ரதாரி நம’ஸ்’காரம்..
சகல வரம் தருவாய் நம’ஸ்’காரம்..
பத்மபீட தேவி நம’ஸ்’காரம்..
பக்தர் தமைக் காப்பாய் நம’ஸ்’காரம்..