தாமரை பூவில் அமர்ந்தவளே | Thamarai Poovil Amarnthavale Song Lyrics
தாமரை பூவில் அமர்ந்தவளே – செந் (தாமரைபூவில்)
செந்தூரத் திலகம் அணிந்தவளே – செந்
(தாமரைபூவில்)
சிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சினில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே – செந்
(தாமரைபூவில்)
சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன் பாதம் எந் நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே – செந்
(தாமரைபூவில்)
அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே
(தாமரைபூவில்)